ருசியான கோதுமை கீரை பக்கோடா செய்வது எப்படி? டீ கொதிக்கும் நேரத்தில் மொறு மொறு பக்கோடா தயார்!

Summary: ரொம்ப ரொம்ப ஈசியா சட்டுனு வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பக்கோடா செய்வது எப்படி. இந்த பக்கோடாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கூடவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளும் இதோடு சேர்ந்து நம்முடைய வயிற்றுக்குள் செல்லும்.மலை வேலையில், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பக்கோடா செய்து பாருங்களேன். மிகவும் அருமையாக அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.  எந்த கீரை இருந்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம் தான். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் கடலை மாவு
  • கப் அரிசி மாவு
  • உப்பு
  • 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி துருவல்
  • 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 கப் கீரை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அகலமான ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், கடலை மாவு – 1/2 கப், அரிசி மாவு – 1/4 கப், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, நறுக்கி வைத்திருக்கும் கீரையும் இந்த பொருட்களுடன் போட்டு முதலில் உங்களுடைய கையை வைத்து நன்றாக இந்த எல்லாப் பொருட்களையும் பிசைந்து கொடுக்க வேண்டும்.
  2. அதன் பின்பு இதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளதளவென பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. இந்த மாவை கிள்ளி கிள்ளி அப்படியே எண்ணெயில் போட்டால் சின்ன சின்ன பக்கோடாக்களாக வரவேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து போட்டு போண்டாவும் சுட்டு சாப்பிடலாம் அது நம்முடைய விருப்பம் தான்.
  4. பொன்னிறமாக பகோடா சிவந்து வந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள் அத்தனை ருசியாக இருக்கும். கீரைக்கு பதில் இந்த பக்கோடா வில் உங்கள் விருப்பம் போல வேறு ஏதாவது காய்கறிகளை சேர்த்து கூட சமைத்துக் கொள்ளலாம்.
  5. அது நம்முடைய விருப்பம்தான். பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பொடியாக நறுக்கிய குடை மிளகாய், கேரட் துருவலை கூட சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் காய்கறிகளை தனியாக கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள் என்பவர்களுக்கு இப்படி ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்.
  6. கண்டிப்பா டீ காஃபி குடிக்கும் போது 4 பக்கோடாவை இப்படி கொடுத்தால் யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.