ருசியான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட், இத ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள்நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். நுரையீரல்: இதில்,ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக்குளிர்ச்சியை தருகிறது.உங்களுக்கு செட்டிநாடு சமையல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும்அந்த ஸ்டைல் அசைவ உணவை வீட்டில் சமைத்து சாப்பிட ஆசையா? சரி, இப்போது அந்த செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்டின்செய்முறையைப் பார்ப்போமா….

Ingredients:

  • மட்டன்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  5. பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!