ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் பால் கூட்டு, ஒரு தரம் இம்முறையில் செய்து அசத்துங்கள்! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

Summary: சாம்பார்களிலும்வறுவல்களிலும் போடப்பட்ட இந்த பரங்கி காயவெச்சு இன்னைக்கு நாம ஆந்திரா ஸ்டைல ஒரு சமையல் செய்ய போறோம். பரங்கிக்காய் குழம்புகள்ல பலவிதங்கள் இருக்கு பரங்கிக்காய் வறுவலும் பொரியலுமா செய்து சாப்பிட்டு இருக்கும். சிலர் கூட்டு வைத்து சாப்பிட்டு இருப்பாங்க. ஆனாலீ ஆந்திரா ஸ்டைலில் யாராவது பரங்கிக்காயில் பால் கூட்டு செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? அதோட சுவை தனியா தான் இருக்கும் சுவையா சுலபமாக பால் கூட்டு செய்ய போறோம். அது எப்படி செய்வது தெரிஞ்சுக்க இருக்கோம். பரங்கிகாலையில் ஆந்திரா ஸ்டைல பால் கூட்டு பண்ண போறோம் அது எப்படி பண்ணலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Ingredients:

  • 1/4 பரங்கிக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சைமிளகாய்
  • 2 கப் தேங்காய்பால்
  • 1/2 கப் காய்ச்சிய பால்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேங்காயில் பால் எடுக்கும் பொழுது முதலில் கிடைக்கும் தேங்காய் பாலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு நீர் சேர்த்து அரைத்து எடுக்கும் தேங்காய் பாலை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் கலக்கக்கூடாது.
  2. பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும். கடுகு பொரிந்த பிறகு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் .
  3. பிறகு அதில் நடுத்தரமான துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள பரங்கி காய்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது இதில் இரண்டாம் முறையாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் மற்றும் காய்ச்சிய பால்   உப்புசேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  4. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கூட்டிற்கு காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்துக் கொள்வதால் காரத்திற்கு ஏற்ப நீங்கள் வேண்டுமென்றால் இரண்டு மூன்று மிளகாய்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
  5. பிறகு வெந்து கொண்டிருக்கும் பரங்கிகாயில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து விடவும் .
  6. பிறகு அதில் நன்றாக கொதி வந்த பிறகு முதலாவதாக எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு தயார்.