ஹோட்டலில் நாம் விரும்பி சாப்பிடும் ருசியான செஸ்வான் சிக்கன் ரெம்ப ஈஸியாக வீட்டில் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும் போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். அந்த சிஷ்வான் மசாலால அப்படி என்ன சுவை இருக்கு எல்லாருக்குமே இவ்வளவு பிடிக்குதே?. இப்படி வித்தியாசமா ஹோட்டல் சுவைகளில் எல்லாரும் விருப்பப்படுற உணவை வீட்டில் செய்து கொடுக்கும் போது எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. சரி வாங்க எப்படி இந்த செஸ்வான் சிக்கன ஹோட்டல் ஸ்டைலை வீட்டிலேயே செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் மைதா
  • 1 முட்டை
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் சோள மாவு
  • 1 ஸ்பூன் சோயாசாஸ்
  • 2 ஸ்பூன் செஸ்வான் சாஸ்
  • 1 ஸ்பூன் நாட்டு சக்கரை
  • 2 ஸ்பூன் வெள்ளைஎள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன்களை சேர்த்து அதில் மிளகுத்தூள், சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும்.
  2. பிறகு இதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஊற வைத்துள்ள சிக்கன்களைஎடுத்து மைதா மாவில் முழுவதுமாக படுமாறு பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
  4. எண்ணெயில் சிக்கனை போடும்பொழுது நன்றாக சூடாக இருக்க வேண்டும். பிறகு அதை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  5. பொரிந்த பிறகு அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோயா சாஸ், செஸ்வான் சாஸ், நாட்டு சக்கரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  6. இவை நன்றாக கலந்த பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள சிக்கன்களை சேர்த்து இந்த சாஸ்கள் முழுவதும் சிக்கனில் படுமாறு நன்றாக கலந்து விட வேண்டும்.
  7. சாஸ்கள் அனைத்தும் சிக்கனில் நன்றாக கலந்த பிறகு மேலே வெள்ளை எள் தூவக இறக்கி பரிமாறினால் சூடான சுவையான செஸ்வான் சிக்கன் ஹோட்டல் சுவையில் தயார்.