சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி ?வாருங்கள் பார்க்கலாம்...

Summary: இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான அப்பள குழம்பை செய்து பாருங்கள். மேலும் இந்த அப்பள குழம்பை நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிடக்கூடாது மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் பிடித்த ருசிகரமான குழம்பாக கண்டிப்பாக இருக்கும். நீங்கள் அப்பளத்தை சைடிஸ் ஆக சாப்பிட்டு இருப்பீர்கள் இன்று அந்த சைடிஸ்யை எப்படி குழம்பாக மாற்றுவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 7 அப்பளம்
  • ¼ kg சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 வர மிளகாய்
  • 6 பற்கள் பூண்டு
  • புளி
  • ½ கப் தேங்காய் பால்
  • ¼ tbsp மஞ்சள்தூள்
  • 2 tbsp குழம்பு தூள்
  • கருவேப்பிலை
  • கொத்த மல்லி
  • ¼ tbsp சீரகம்
  • ¼ tbsp கடுகு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்

Steps:

  1. செய்முறை
  2. முதலில் ஒரு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சுடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் சூடறியவுடன் அதில் கடுகு சேர்க்கவும்.
  3. கடுகு நன்றாக பொரிந்து வரும் நிலையில் சீரகம், பூண்டு, வர மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்கவும். பின் இதனுடன் நம் வைத்துள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி பச்சை வாடை போயி, தக்காளி மென்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
  6. பின்பு 2 டீஸ்பூன் குழம்பு பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள் மசாலா நன்றாக வதங்கி மசாலா வாடை சென்றபின் சிறிய அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  7. தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் எண்ணெய் தனியாக மசாலா தனியாக பிரிந்து வரும் பதத்தில் நாம் வைத்திருக்கும் புளியை கரைத்து ஊற்றவும். புளி கரைந்து ஊற்றிய பிறகு 3 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குழம்பு கலக்கி விட்டு பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.
  8. இந்த சமயத்தில் நாம் வைத்திருக்கும் அப்பளத்தை கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அப்பளத்தை பொறித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  9. பத்து நிமிடம் குழம்பு நன்றாக கொதித்தவுடன் 1/2 கப் தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பின் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை பாதி பாதியாக உடைத்து குழம்பில்சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள்.
  10. பின்பு குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்கிவிட்டு கொத்தமல்லி சிறிதளவு தூவி விடுங்கள். இப்பொழுது சுவையான அப்பளக் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.