Summary: தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம். மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும்.