Summary: பச்சைப் பயறு சாதம் என்பது ஒரு கொங்கு நாட்டு உணவாகும். நம் பாரம்பரியமான உணவுகளில் அதிகம் பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் என்று சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு பயிறு வகைகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் பெறுவார்கள். நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு பொரியல் இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த பச்சை பயிறு பருப்பு சாதம் வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.