மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் ருசியான சுக்கு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்!

Summary: வீட்டில் சுக்கு குழம்பை ட்ரை செய்து பார்க்கலாம். எங்கேயாவதுவெளியூருக்கு பயணம் செய்யப் போவதாக இருந்தாலும் இந்த சுக்கு குழம்பினை உடன் எடுத்துச்செல்லலாம். நான்கு நாட்கள் ஆனாலும் வீணாகாமல் இருக்கும். மருத்துவ குணம் நிறைந்த ஒருஉணவுப் பொருளான சுக்கு , சளி இருமல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவ்வாறுபல வழிகளில் பலன் தரக்கூடிய இந்த சுக்கினை வைத்து செய்யக்கூடிய சுவையான சுக்கு குழம்பினைஎவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Ingredients:

  • சுக்கு
  • புளி
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 10 பூண்டு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி தனியா
  • 1/2 தேக்கரண்டி எள்
  • பெருங்காயம்
  • கொத்தமல்லித் தழை
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெறும் வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள், நசுக்கிய சுக்கு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.
  2. புளியை ஊறவைத்து கரைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. வதக்கியவற்றை புளிக்கரைசலில் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு சுண்டி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.