காரசாரமான ருசியில் எக் வெஜிடபிள் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசிக்கு எவ்வளவு கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

Summary: கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றை வைத்துதான் பிரியாணிசெய்வதுண்டு. அதிலும் கோழிக்கறி பிரியாணியை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள்.ஆனால் இவை இரண்டும் இல்லாமல் வெறும் முட்டையை வைத்தும் வெஜிடபிள் ரைஸ் சுவையாக செய்துமுடிக்கலாம். இதனை நினைக்கும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதிலும்இந்த மழை காலத்தில் சட்டென செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமாகஇருக்கும். கமகம மணத்துடன் காரசாரமான சுவை நாவில் பட்டவுடனே எச்சில் ஊர ஆரம்பித்துவிடும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கிலோ சீரகசம்பா
  • 150 கிராம் நெய்
  • 4 முட்டை
  • 1/2 கப் விருப்பமான காய்கறிகள்
  • உப்பு
  • கிராம்பு
  • பட்டை
  • ஏலக்காய்
  • பிரிஞ்சி
  • 8 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 15 முந்திரி
  • 3 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரிசியை கலைந்து அரைமணி நேரம் ஊற விடவும். வாணலியில் நெய் சிறிது நெய்விட்டு காய்கறிகளை உப்பு சேர்த்து அரை பதமாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் முட்டையை பொடிமாஸ் போல் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பெரிய பாத்திரத்தில் நெய் விட்டு வாசனை பொருட்கள்,வெங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் பின்னர் இஞ்சி பூண்டு விழுது, உப்பு என ஒன்றன் பின்ஒன்றாக சேர்க்கவும்.
  4. அரிசியை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின் தேவைக்கு நீர் சேர்த்து கொதிக விடவும்.
  5. முக்கால் வாசி நீர் வற்றும் சமயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக காய்கறிகள் மற்றும் முட்டையை சேர்த்து ஒரு முறை கிளறி பின் 10 நிமிடங்கள் தம்மில் போடவும். பின் எடுத்து பரிமாறவும்.
  6. சுவையான எக் மற்றும் வெஜிடபிள் ரைஸ் தயார்.