இந்த வார இறுதியை ஸ்பெஷலாக்க ருசியான ஆட்டு கால் பாயா சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

Summary: வீடுகள்லசெய்ற ஆட்டுக்கால் பாயா நல்லா இருக்காது அப்படின்னு நினைக்கிறதுதான். ஆனால் ஆட்டுக்கால் பாயாவை ரொம்ப சுலபமாக கடைகளில் விட அதிகமான சுவையில் எப்படி வீடுகளில் செய்யலாம். ரொம்பவே நல்லா இருக்கும் இப்போ நீங்க ஆட்டு கால் வேணும் அப்படி கடைகளில்  முதல் நாளே சொல்லி வச்சிட்டா சுத்தமா தோலெல்லாம் நீக்கி சுட்டு எல்லாமே கிளீன் பண்ணி கொடுத்துடுவாங்க. அப்படியே அவங்க கிளீன் பண்ணி அந்த ஆட்டுக்கால கொடுத்தா கூட நீங்க ஒருவாட்டி சுத்தமாக கழுவிட்டு அதுல ஏதாவது ஆட்டோட முடியெல்லாம் இருக்கா அப்படின்னு பாத்துட்டு நல்லா சுத்தம் பண்ணி அலசி வச்சுட்டு மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து அதுக்கப்புறம் தான் அதை பயன்படுத்த வேண்டும்.

Ingredients:

  • 2 ஆட்டின் கால்கள்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 வெங்காயம்
  • 1 பிரியாணி இலை
  • 2 அன்னாசி பூ
  • 2 ஜாதிபத்ரி
  • 4 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1 கைப்பிடி புதினா , கொத்தமல்லி
  • 1 கப் காய்ச்சிய பால்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 10 முந்திரிபருப்பு
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு குக்கரில் ஆட்டுக்காலை வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கர் மூடி போட்டு ஏழு விசில் வரை வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், அன்னாசிப்பூ பிரியாணி இலை, ஜாதிபத்ரி , எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  4. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அப்பொழுது இதில் சீரகத்தூள், மல்லித்தூள் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  5. பின்பு அதில் சோம்பு சேர்த்து கலந்து விட்டு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொண்டு அந்த விழுதையும் தயிர் கலந்த பிறகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  6. இப்பொழுது அதில் காய்ச்சி வைத்துள்ள பாலை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பாலை சேர்த்த பிறகு கொதி வந்ததும்.
  7. அதில் ஏழு விசில் வைத்து வேக வைத்து எடுத்து வைத்துள்ள ஆட்டுக்கால்கள் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு மசாலாவுடன் கொதிக்க விடவும்.
  8. இப்பொழுதுஅதில் மிளகுத்தூள், அரைத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதி வந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் ருசியான ஆட்டுக்கால் பாயா தயார்.