காரசாரமான சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு செய்வது எப்படி ?

Summary: முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் சுலபமாக வைக்கப்படும் குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆகிய வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு வகை. அந்த வகையில் காரைக்குடி ஸ்டைலில் முட்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Ingredients:

  • 5 முட்டை
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 தக்காளி
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் சிக்கன் தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், சேர்த்து வதக்கவும், வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
  4. பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
  5. பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
  6. கொதித்த பின் இறுதியில் வேக வைத்த முட்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான காரைக்குடி முட்டை குழம்பு தயார்.