வாய்க்கு ருசியாக காளான் குடைமிளகாய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க எவ்வளவு செய்தாலும் பத்தாது!

Summary: காளான் குடைமிளகாய் வறுவல் என்பது மிகவும்காரசாரமான சுவை மிகுந்த ஒரு உணவு பொருளாகும் இதனை காலை மாலை இரவு என மூன்று வேளைகளுக்கும்சைடிஷ் ஆகவும் மெயின்டீஷாவும் கூட வைத்து சாப்பிடலாம் இதன் சுவை அபார ருசியாக இருக்கும்இதனை ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும் மீண்டும் மீண்டும் உங்களுக்கு தினசரி செய்யத்தோணும் அந்த அளவிற்கு சுவையான ஒரு உணவாகும் .

Ingredients:

  • 250 கிராம் காளான்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பல் பூண்டு
  • 1 குடைமிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  2. பின்னர் பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
  3. பின்பு அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
  4. பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்துபிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்குவெந்தது தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காளான் குடைமிளகாய் வறுவல் ரெடி!!!