வீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

Summary: ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைகள் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவர்களை கட்டாயப்படுத்தி இந்த காய்கறி உணவுகளை சாப்பிட வைக்க முடியாது. எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் இவற்றை சுவையான உணவுகளாக சமைத்து கொடுத்தால் தானாகவே உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும்.

Ingredients:

  • 2 பீட்ரூட்
  • 1 டம்ளர் பாசுமதி அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி
  • 1/2 எலுமிச்சை பழம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் ஒரு பவுளில் பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பிறகு பீட்ரூடை தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. பின் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  5. பீட்ரூட் வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. அதன்பிறகு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து, கடைசியாக கொத்தமல்லி, புதினா தூவி கலந்து மூடி விடவும்.
  7. அதன்பிறகு குக்கரில் ‌2 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சூப்பரான பீட்ரூட் பிரியாணி தயார்.