காரசாரமான ருசியில் கொங்கு நாட்டு தக்காளி கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! சாதத்துடன் பிரட்டி சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Summary: வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு தக்காளி கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால், கொங்கு நாட்டு தக்காளி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.

Ingredients:

  • 4 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • 1 கப் தேங்காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 4 முந்திரி பருப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய், கசகசா, தக்காளி சேர்த்து லேசாக அரைத்து மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதன்பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி விடவும்.
  6. குக்கரை 2 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சூப்பரான கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கிரேவி தயார்.