தித்திக்கும் சுவையில் செவ்வாழை பழம் மில்க் ஷேக் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்கள்!

Summary: பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியம் நிறைந்த பானம். அதனால் தான் மருத்துவர்கள் நம்மை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். அதே நேரம் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு இரண்டுக்கும் வாழைப்பழம் நல்ல உதவும். அந்தவகையில், செவ்வாழை பழம் வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம். நமது உடல்நலத்தை பேணி காக்க வாழைப்பழம் உதவுகிறது. தினமும் காலையில் இதை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான எனர்ஜியை கொடுக்கும். வாழைப்பழ மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான பானம். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

Ingredients:

  • 2 செவ்வாழைப்பழம்
  • 1 சப்போட்டா
  • 1 1/2 கப் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம் முந்திரி
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் பீனட் பட்டர்
  • 3 டேபிள் ஸ்பூன் ஐஸ்கிரீம் ‌

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கண்ணாடி டம்ளர்

Steps:

  1. முதலில் செவ்வாழையை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு‌ பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம், சப்போட்டா, பால், சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. இப்போது நாம்‌ அரைத்து வைத்துள்ள மில்க் ஷேக்கை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. அதன்பிறகு அதன் மேல் பீனட் பட்டர் ஊற்றி, ஒரு‌ கரண்டி ஐஸ்கிரீமை வைத்து, நறுக்கிய பாதாம் முந்திரி தூவி பரிமாறவும்.
  6. அவ்வளவுதான் சத்தான செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் தயார்.