காரசாரமான ருசியில் வாழைக்காய் சேவ் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும்ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய்பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னாரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்துகொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க.எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்குஅந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமேஅப்படித்தான்

Ingredients:

  • 3 வாழைக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வாழைக்காயின் காம்பையும் நுனியையும் நறுக்கிவிட்டு கழுவி விட்டு ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. ஆவியில் வேக வைத்து எடுத்த வாழைக்காயை தோலை நீக்கிவிட வேண்டும். தோலை நீக்கினால் வாழைக்காய் சமேலே கருப்பாக தெரியும். அது வேக வைத்ததினால் வந்தது.
  3. பிறகு வைத்து வேக வைத்த வாழைக்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  4. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ளவெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில்துருவி வைத்த வாழை காய்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்த்து கலந்து மூடிபோட்டு வேக வைக்கவும்.
  6. பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான வாழைக்காய் சேவ் பொரியல் தயார்.