ருசியான கர்நாடகா வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Summary: கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஹோட்டல்களில்ரொம்பவே ஃபேமஸான இந்த ஹம்பி சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். ஹம்பி ஹோட்டல்களில்இந்த வேர்கடலை சட்னி ரொம்பவே ஸ்பெஷல். பொடி தோசைக்கு மட்டும் தான் சாப்பிடலாமாஅப்படின்னா இல்ல எந்த தோசையா இருந்தாலும் சரி இட்லியா இருந்தாலும் சரி இந்த ஹம்பி ஸ்டைலில் வேர்கடலை சட்னி செய்து சாப்பிடும்  போது ரொம்பவே ருசியான சாப்பாடா இருக்கும்.இது காலை நேர உணவுகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே சுலபமாகவும் செய்துவிடலாம்.ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும். அதனால குழந்தைகளுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் இந்த சட்னி ரொம்பவே விருப்பமான சட்னியா இருக்கும்.

Ingredients:

  • 1 கப் வேர்க்கடலை
  • 4 பச்சைமிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கைப்பிடி புதினா
  • புளி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பிறகு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  3. அதன் பிறகு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாகவதக்கி விடவும்.பின்பு அதில் புதினா இலைகள், சீரகம் , புளி சேர்த்து நன்றாக வதக்கிவிடவும்.வதக்கிய பொருட்கள் எல்லாம் ஆற வைக்க வேண்டும்.சட்னிக்கு தேவையான  பொருட்கள் ஆறிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜார்ருக்குமாற்ற வேண்டும்.
  4. பின்பு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, தேங்காய்,தேவையான அளவு உப்பு சேர்த்து சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அரைத்து சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துசட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
  6. இப்பொழுது ஹம்பி  ஹோட்டல் ஸ்டைல்  சட்னி தயார். இந்த சட்னியை இட்லி, தோசை, பொடி தோசைஉடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.