குந்தாபுர் இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும் இப்படி செய்து பாருங்க!

Summary: குந்தாபுர் இறால் வறுவல் ரொம்பவே ருசியாகவும் எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியாகவும் இருக்கும். இறால்கள் நல்ல கொழுப்பு அமிலங்களும்  அதிகமாக் கொண்டவை அதனால உடலுக்கு ரொம்பவே அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. முடிஞ்ச அளவுக்கு இந்த இறால் உணவுகளை உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இந்த இறால்களில் எந்த ஒரு கெட்ட அமிலங்களும் இல்லாததுனால இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்குமே நல்லாவே எல்லாரும் சாப்பிடலாம். சரி இப்படி சுவையான நிறைய சத்துக்கள் உடைய இந்த இறால்ல குந்தாபுர் ஸ்டைல்ல இறால் வறுவல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Ingredients:

  • 1/2 கிலோ இறால்
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 5 காய்ந்த மிளகாய்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் புளி கரைசல்
  • 10 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் நெய்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய், முந்திரியை கண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா விதைகள் , மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம், கசகசாவை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  3. பிறகு வறுத்து வைத்துள்ள இவைகளை ஆற வைதது ஒருமிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊற வைத்து எடுத்துள்ளகாய்ந்த மிளகாய், முந்திரி சேர்த்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு அதில் புளி கரைசல், பூண்டு வெல்லம் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  6. இதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள இறால்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. இந்த இறால்களை மூடி போட்டு வேக வைக்கவும் இறால் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
  8. இறால் நன்றாக சுருள வெந்து வந்த பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுப் சூடாக பரிமாறினால் சுவையான குந்தாபுர் இறால் வறுவல் தயார்.