ஆந்திரா வெண்டைக்காய் வேப்புடு இப்படி செஞ்சா கண்டிப்பா நீங்க சாப்பிடற சாப்பாடு பத்தவே பத்தாது!

Summary: வெண்டைக்காய் சாப்பிடுவதற்கு இப்படி ருசியான வெண்டைக்காய்வேப்புடு எப்படி செய்யறது அப்படின்னு பாக்க இருக்கோம. நிறைய பேருக்கு வெண்டைக்காய்பொரியல் சாப்பிடணும்னு ஆசை இருக்கும் ஆனா அதோட கொழ கொழப்பு தன்மைக்காகவே சாப்பிடாமஇருப்பாங்க. அப்படி கொழகொழப்பு தன்மைக்காக சாப்பிடாமல் இருக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த வெண்டைக்காய் செய்து கொடுங்க.ரொம்பவே நல்லா விரும்பி சாப்பிடுவார்கள். அந்த கொழகொழப்பு தன்மை எல்லாம் இல்லாமல் ரொம்பசுவையாவும் இருக்கும் . இந்த ஆந்திரா வெண்டைக்காய் வோப்புடு எப்படி செய்யலாமுனு தெரிஞ்சுக்கலாம்வாங்க.

Ingredients:

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 கப் வேர்க்கடலை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சைமிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெண்டைக்காயை கழுவி எடுத்துவிட்டு ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  3. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பிறகு அதில் உப்பு , நறுக்கிவைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். எண்ணெய் சேர்க்க தேவையில்லை.
  5. வெண்டைக்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  6. ஐந்து நிமிடம் கலந்துவிட்ட பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு சூடாக பரிமாறினால் ருசியான ஆந்திரா வெண்டைக்காய் வேப்பிடு தயார். இது அனைத்துவகையான கலந்த சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.