வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?

Summary: இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக செய்துவிடலாம் உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த தேங்காய் பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற தேங்காய் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய் பர்பி சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 2 கப் சர்கரை
  • தண்ணீர்
  • 3 கப் துருவிய தேங்காய்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • 2 tbsp நெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து பின் சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீய அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் சர்க்கரை முற்றிலும் கரைந்து சர்க்கரை கரைசல் கொதித்து நுறை நுறையாக வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். அதன் பின் சர்க்கரை கரைசல் கொதித்து வந்ததும் இதனுடன் நாம் துருவி வைத்திருக்கும் மூன்று கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
  3. பின் தேங்காய் சேர்த்ததும் கடாய் அடி பிடிக்காமல் இருப்பதற்காக நீங்கள் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்பு தேங்காய் நன்கு வெந்து வரும் சமயத்தில் இதனுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து கிளறி விடுங்கள்.
  4. அதன் பின்பு பர்பி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள் பின் தேங்காய் பர்பி அல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் வந்ததும் ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவி அதனுடன் தேங்காய் பர்பியை சேர்த்து சமமாக்கிக் கொள்ளுங்கள்.
  5. பின் 30 நிமிடம் கழித்து பர்பி கட்டியாக மாறியதும் அதை உங்களுக்கு தேவையான அளவு துண்டுகளாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட சாப்பிட கொடுத்து, நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சாப்பிடலாம். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பர்பி இனிதை தயாராகி விட்டது.