இட்லி, தோசையுன் சாப்பிட ருசியான ராயலசீமா உளுந்து பச்சடி இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் கூட பண்ணி இருக்க மாட்டீங்க!!!         

Summary: உளுந்து மூட்டு வலி பிரச்சனைகளை சரி செய்வதுக்கும் பயன்படுது. அதுமட்டுமல்லாமல் உளுந்து வந்துரொம்ப ரொம்ப ருசியான ஒரு தானியம். உளுந்துல நிறைய விதமான உணவுகள் செய்யலாம் உளுந்து லட்டு, உளுந்து கஞ்சி, உளுந்து களி இதெல்லாம்செய்து சாப்பிட முடியாதவர்கள் ரொம்ப சுலபமாக உளுந்துல பொடி அப்படி இல்லன்னா இட்லி கூடசாப்பிட்டுக்கலாம். இந்த மாதிரி ஏதாவது ஒரு வகையில உணவுல உளுந்த சேத்துகிறது ரொம்பவேநல்லது தான். இப்போ ராயலசீமாவில் ரொம்பவே ஃபேமஸான உளுந்து பச்சடி எப்படி செய்யலாம்அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் இருக்கோம். வாங்க அந்த பச்சடி எப்படி செய்யலாம் அப்படின்னுபார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் கருப்பு உளுந்து
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 6 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • புளி
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் தனியா விதைகளை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு அதில் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இப்பொழுது வானொலியில் எண்ணெய் சேர்த்து கருப்பு உளுந்தை நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  3. வறுத்த கருப்பு உளுந்தை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும். பிறகு அதே வானொலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  4. பின் வானெலியில் பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கிய பொருட்கள் எல்லாம்ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கருப்பு உளுந்து, மிளகு , சீரகம், தனியா விதைகள், காய்ந்தமிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அதில் வதக்கி வைத்துள்ள பூண்டு , தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணி ஊற்றி புளியுடன் சேர்த்துநன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள உளுந்து விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. பின்பு அதில் வெங்காயத்தை நசுக்கி சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் கலந்து விட்டால் சுவையான ராயலசீமா உளுந்து பச்சடி தயார்.