ருசியான நவரத்தின குருமா, சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம், தோசை, இதற்கெல்லாம் பக்காவான சைட் டிஷ் இது!

Summary: மட்டன் வாங்கி இருக்க மாட்டீங்க.பல பயிறு வகைகளை  வைத்து தான் குருமா செய்வீங்க.ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம்கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த நவரத்தின குருமாவில் வீசும். அப்படி ஒரு சூப்பர்நவரத்தின குருமா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும்சில மசாலா பொருட்களுடன் பல கடலை, பயிறு வகைகளை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும்நவரத்தின குருமா ரெசிபி உங்களுக்காக .

Ingredients:

  • 50 கிராம் பட்டாணி
  • 50 கிராம் கொண்டைகடலை
  • 50 கிராம் சோயாபீன்ஸ்
  • 50 கிராம் பாசிப்பயிறு
  • 50 கிராம் மொச்சை
  • 50 கிராம் கறுப்பு கொண்டைகடலை
  • 50 கிராம் ராஜ்மா
  • 1 காரட்
  • 1 உருளைக்கிழங்கு
  • 10 பீன்ஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி மல்லி தூள்
  • கறிவேப்பில்லை
  • கொத்தமல்லி
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றைஅரைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு பின்ஸ், காரட், உருளைக்கிழங்கு,தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.பிறகு ஒரு வானாலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  3. சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
  4. உப்பு, தேங்காய் விழுது சேர்த்துநன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கும் போது கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.