இட்லி, தோசையுடன் தொட்டுக் சாப்பிட ருசியான பீர்க்கங்காய் கடையல் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக உண்ணும் வகையில்சமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. ​பீர்க்கங்காய் பீர்க்கங்காயில்உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுகிறது,உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ​பீர்க்கங்காய்,​சரும பளபளப்பை தருகிறது ,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சற்று வித்தியாசமானதும், சுவையானதுமானபீர்க்கங்காய் கடையலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்

Ingredients:

  • 1/4 கிலோ பீர்க்கங்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கொத்து கொத்தமல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கால் கிலோ பீர்க்கங்காயை தோல் சீவிதண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
  2. பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தைநான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூண்டை தோலுரித்து சுத்தம்செய்து வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய், வெங்காயம்மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும்.
  3. பின்னர் இவற்றுடன் பூண்டு, பச்சைமிளகாய் இதனையும்சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன்மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாககலந்து விட வேண்டும்.
  4. பிறகு இவற்றுடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாககலந்து விட்டு, அடுப்பின் மீது வைத்து, குக்கரை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர்குக்கரில் பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும்.
  5. பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர்மூடியை திறந்து பருப்பு கடையும் மத்து வைத்து அனைத்தையும் நன்றாகக் கடைந்துவிட வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம்,உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பீர்க்கங்காய் கடையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி கலந்து விட வேண்டும்..