ருசியான திடீர் புளி சாதம் ரெம்ப சுலபமாம தயார் செய்துவிடலாம்! இந்த  ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்கோங்க!

Summary: திடீர் புளி சாதம் செய்முறை தெரிஞ்சி வச்சுகிட்டாபோதும். சொடக்கு போடுற நேரத்துல புளிசாதம் செய்து விடலாமே. ஆனால் அதற்கு கட்டாயமாகசாதம் வடித்து வைத்து இருக்க வேண்டும். வடித்த சாதம் இருந்தால் நிமிடத்தில் இந்த திடீர்புளி சாதத்தை தயார் செய்துவிடலாம். குறிப்பாக நீங்கள் பேச்சிலராக இருந்தால் உங்களுக்குஇது மிகமிக உபயோகமானதாக இருக்கும்.  பேச்சிலர்ஸ்குமட்டும்தானா? இல்லத்தரசிகளுக்கு இல்லையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். யார் வேண்டும்என்றாலும் இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

Ingredients:

  • 3 கப் சாதம்
  • 1 புளி
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 10 சிறிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புளியை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து,வடிகட்டவும்,
  2. வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். மிளகாயை கிள்ளி வைக்கவும்,
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்ததும், சாதம் சேர்த்து கிளறவும். சாதம் நன்கு வதங்கியதும் இறக்கவும்.