உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும்இருக்கிற கருணைக்கிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும். எப்பவுமேஉப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர்அடிச்சு போய் இருக்கா அப்போ கருணைக்கிழங்கு இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டுசாப்பிடுவாங்க. கருணைக்கிழங்கு அரிப்பு இல்லாம செய்யறது ரொம்பவே சுலபம். அப்படி தான் நம்ம கருணைக்கிழங்கு செய்து சாப்பிட போறோம்.இந்த ருசியான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ கருணைகிழங்கு
  • 1 கப் புளி கரைசல்
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கருணைக்கிழங்கை தோல் சீவி விட்டு  கழுவி நீளவாக்கில் பிரெஞ்ச் ப்ரைஸ் செய்வது போலநறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கருணைக்கிழங்கு, புளிக்கரைசல், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து முக்கால் பதம்வேக வைக்கவும்.
  2. கருணைக்கிழங்கு முக்கால் பதம் வெந்த பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்கருணை கிழங்கில் சோளமாவு, சிறிது  உப்பு சேர்த்துகலந்து வைக்கவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய்ஊற்றி அதில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள கருணைக்கிழங்குகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பிறகு ஒரு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதை நன்றாக வதங்கிய பிறகு அதை அடுப்பை நிறுத்திவிட்டு அந்த சூட்டில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  5. வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. அதில் மிளகாய்தூள் ,பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து  கலந்து மசாலாக்கள் படும் அளவு கலந்து விட்டு எடுத்து பரிமாறினால் சுவையான உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் தயார்.