எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான வாழைக்காய் மிளகு மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Summary: முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயை வறுப்பதுதான் பலருடையாக முதல் தேர்வாக இருக்கும். ஆனால் என்றைக்காவது அதில் மிளகு‌ மசாலா வைக்க யோசத்ததுண்டா..? அதுவும் மட்டன் சுக்கா சுவையில் சமைத்து சாப்பிட தோன்றியதுண்டா..? மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Ingredients:

  • 3 வாழைக்காய்
  • 3/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோல் சீவி, வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெறும் கடாயில் மிளகு, சீரகம், சோம்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் அதே கடாயில்‌ எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. அதன்பிறகு வாழைக்காய், மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வாழைக்காய் சற்று வெந்ததும் மஞ்சள்‌ தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்புத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. வாழைக்காய் ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வாழைக்காய் மேல் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் சுவையான, வித்தியாசமான வாழைக்காய் மிளகு மசாலா தயார்.