ஹோட்டல் சுவையில் காரசாரமான சிக்கன் கிளியர் சூப் செய்வது எப்படி ?

Summary: உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லாத போதும் தொண்டை சார்ந்த பிரச்சினைகள் இருக்கும் பொழுது இது போன்ற இந்த சிக்கன் கிளியர் சூப் செய்து கொடுத்தால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் சூப் குடிக்க விருப்பப்படும் பொழுது இந்த சிக்கன் கிளியர் சூப் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி குடிக்கும் வகையில் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் கிளியர் சூப் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள் குறிப்பாக குழந்தைகள் மேலும் கேட்டு வாங்கி குடிப்பார்கள்.

Ingredients:

  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 1 கேரட்
  • 4 செலெரி ஸ்டிக்
  • 2 லிட்டர் தண்ணீர்
  • ¼ KG எலும்பு சிக்கன்
  • 1 tbsp கல் உப்பு
  • 1 tbsp மிளகு
  • 1 பிரியாணி இலை
  • சிக்கன் தண்ணீர்
  • 150 கிராம் ப்ராக்கோலி
  • 150 கிராம் காளான்
  • 1 tbsp பூண்டு
  • முட்டை கோஸ்
  • 100 கிராம் எலும்பில்லா சிக்கன்
  • 1 tbsp மிளகு
  • 1 tbsp சோயா சாஸ்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 வடிகட்டி

Steps:

  1. சிக்கன் கிளியர் சூப் செய்வதற்கு முதலில் சிக்கன் தண்ணீர் வேண்டும் அதற்காக ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து. அதனுடன் இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,
  2. 5 பல் பூண்டு, ஒரு கேரட், நறுக்கிய செலெரி ஸ்டிக், கால் கிலோ எலும்புள்ள சிக்கன், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு பிரியாணி இலை போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து ஒரு ஒரு மணி நேரம் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு சிக்கன் தண்ணீர் சூடு இறங்கியதும் அதில் உள்ள பொருட்களை வடிகட்டி விட்டு வேற பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பின் இதிலிருந்து பாதி அளவு சிக்கன் தண்ணீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது சூப் செய்து கொள்ளுங்கள்.
  4. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மீத பாதி சிக்கன் தண்ணீரை சேர்த்து அதனுடன் 150 கிராம் ப்ராக்காலி, 150 கிராம் காளான், சிறிது முட்டைகோஸ், 100 கிராம் எலும்பில்லாத கறி, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் நாம் சேர்த்த சிக்கன் நன்கு வெந்து வந்ததும் தீயை மிதமாக எரிய விட்டு. ஒரு ஐந்து நிமிடங்கள் கடாயை மூடி வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் காரசாரமான சுவையில் சிக்கன் கிளியர் சூப் இனிதே தயாராகி விட்டது.