காரசாரமா குண்டூர் கார சட்னி இந்த பக்குவத்தில் செய்து செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Summary: இட்லியை தோசை இதுக் கெல்லாம் சுவையா கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்கருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த குண்டூர் கார சட்னி வைத்து சாப்பிட்டுபாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும்இந்த குண்டூர் கார சட்னி. சரி வாங்க இந்த குண்டூர் கார சட்னி எப்படி செய்யலாம் என்றுதெரிந்து கொள்ளலாம்.காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த குண்டூர் கார சட்னியை நம்மசெய்ய போறோம்.

Ingredients:

  • 10 காய்ந்த மிளகாய்
  • 15 பல் பூண்டு
  • புளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் காய்ந்த மிளகாய் காம்பை கிள்ளி விட்டு அதன் மேல் உள்ள தலைப்பகுதி நறுக்கி விட்டு உள்ளே உள்ள மிளகாய் விதைகளை எடுத்து விட வேண்டும். விதைகளை எடுத்த காய்ந்த மிளகாய்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. பிறகு பூண்டு பற்களை தோலுரித்து எடுத்துக் கொண்டு இஞ்சிக் கல்லில் தட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அதே போல சின்ன வெங்காயத்தை தோலுரித்து விட்டு இஞ்சிக்கல்லில் சேர்த்து தட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. ஒரு மணி நேரம் ஊறிய காய்ந்த மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய்ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு நசுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  6. நசுக்கிய பூண்டை ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு அதில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மிளகாய் புளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும்.
  7. இந்தக் கார சட்னி நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.
  8. காரமான கம கம சூடான குண்டு கார இட்லி, தோசைக்கு சாப்பிட தயார்.