காரசாரமான ருசியில் தரமான சிக்கன் நூடுல்ஸ் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!

Summary: காலத்திற்கேற்றவாறு நம்முடைய வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் நம்முடைய உணவு முறைகளும் மாறிவிட்டது. பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதில் பெரும்பாலும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவை இடம்பெறும். இந்த நூடுல்ஸ் வகை உணவுகள் சீன நாட்டு உணவு முறைகளில் ஒன்று. இது இப்போது பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். தற்போது பாஸ்ட் புட் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

Ingredients:

  • 2 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1/4 கப் கேரட், பீன்ஸ், கோஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 4 முட்டை
  • 1/4 கப் பொரித்த சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸை உடைத்து சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
  2. நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி ஆற விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  4. இதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  5. காய்கறிகள் சிறிது வெந்ததும் பின் சிக்கன் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதன்பிறகு ஆறிய நூடுல்ஸ் சேர்த்து வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பின் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விட்டு சூடாகப் பரிமாறவும்.
  8. அவ்வளவுதான் சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார்.