அடுத்தமுறை மீன் வறுவல் செய்யும் போது இப்படி கறிவேப்பிலை சேர்த்து மீன் வறூவல் செஞ்சி பாருங்க வீடே கமகமக்கும் ரெசிபி!

Summary: அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த மீனை பொறுத்தவரை நாம்  குழம்பு,பிரியாணி,புட்டு  இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விடவறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும்பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான். அப்படிப்பட்ட மீனை வறுவலை கருவேப்பிலை சேர்த்து கறிவேப்பிலை மீன்  வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1 பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish)
  • பெரிய கையளவு தேங்காய் எண்ணெய்
  • 1 கையளவு கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 3 வரமிளகாய்
  • 4 பற்கள் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்
  3. பின்பு அந்த மசாலா தூள் வகைகளை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
  4. பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!