மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ருசியான கொத்தவரங்காய் மசாலா இப்படி செஞ்சி பாருங்க! சுடு சாதத்துடன் சாப்பிட பக்காவான கூட்டு!

Summary: என்னதான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் கூட்டு, கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கொத்தவரங்காய் மசாலா செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆனால் கொத்தவரங்காய் பலருக்கு பிடிக்காது. அதற்கு அவர்கள் அதனை சரியாக சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை சரியாக சமைத்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது.

Ingredients:

  • 250 கி கொத்தவரங்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 வர‌ மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 வாணலி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கொத்தவரங்காயை நன்கு கழுவி நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்சியில் வரமிளகாய், தேங்காய், சோம்பு‌ மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  4. அதன்பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், கொத்தவரங்காய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. கொத்தவரங்காய் வதங்கியதும் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து நன்கு சுருள‌ வதக்கவும்.
  6. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மசால் கொத்தவரங்காய் தயார்.