ருசியான பிரண்டை கடையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது!!!

Summary: உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்,உணவினை சாப்பிடும் அளவிற்கு பலருக்கும் விழிப்புணர்வு வந்துள்ளது. எந்த இணைவு சாப்பிட்டால் உடல் நலம் சீர் படும் என்பதை பற்றியெல்லாம் யோசிடது உண்கின்றனர். காலை அவசர அவசரமாக வேலைக்கு சென்று மதியம் எதையாவது சாப்பிட்ட பின், மறுபடியும் வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு உறங்கும் வழக்கத்தைக் மாற்றி கொண்டிருக்கிறார்கள்.மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் கடையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

Ingredients:

  • 1 பிடி பிரண்டை
  • 1 பிடி துவரம் பருப்பு
  • 1/2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 3 பூண்டு
  • புளி
  • வெந்தயம்
  • எண்ணெய்
  • உப்பு
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றவும்,
  2. வெங்காயம்,பூண்டு, துவரம் பருப்பு,காய்ந்த மிளகாய், வெந்தயம், பிரண்டை துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, நன்கு வேக வைக்கவும்.
  4. வெந்ததும்,காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். பின், துவரம் பருப்பு மற்றும் பிரண்டை சேர்த்து அரைக்கவும்.
  5. ஒரு கடாயில், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடைசலில் சேர்த்து பரிமாறவும்.