பாரம்பரிய சுவையில் சுறா புட்டு சுலபமாக செய்றது எப்படின்னு தெரிஞ்சிக்கலாமா?

Summary: பால் சுறா புட்டு ரொம்பவே சுலபமா வீட்ல ரொம்ப ரொம்ப ஈஸியாவே பண்ணலாம். சுறாவில் புட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்பவே அருமையான சுவையில இருக்கும். இந்த பால் சுறா புட்ட நாம்  சாப்பாட்டுக்குசேர்த்தும் சாப்பிடலாம் இல்ல அதை ஸ்னாக்ஸ் மாதிரி அப்படியே கூட சாப்பிட்டுக்கலாம். இந்த பால் சுறாவோட சுவை ரொம்ப அருமையா இருக்கும். இந்த மாதிரி புட்டு செய்து சாப்பிடும்போது இன்னும் நல்ல டேஸ்டாக இருக்கும். இந்த பால் சுறா புட்டு சீக்கிரமா ரொம்பவே சுலபமா செய்து முடித்துவிடலாம்.

Ingredients:

  • 1 பால் சுறா
  • 2 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 எலுமிச்சைபழம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சுறா மீன்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சுறா மீனில் மஞ்சள் தூள், எலுமிச்சை பழம் சிதறிதளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. மீன்கள் 15 நிமிடம் ஊறிய பிறகு அவற்றை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொண்டுள்ள பால் சுறாக்களின் தோலை உரித்து விட்டு உள்ளே இருக்கக்கூடிய ஒற்றை முள்ளை எடுத்துவிட்டு மற்ற சதைப்பகுதிகளை கையால் அல்லது முள் கரண்டியாலோ பொடியாக பிசிறி விட வேண்டும்.
  3. பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  5. பிறகு அதில் உதிர்த்து வைத்துள்ள சுறாமீன் சதைப்பகுதிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் . சுறா சதை பகுதிகள் நன்றாக பொடிமாஸ் போல் கலந்து வந்த பிறகு அவற்றின் மேல் எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.
  6. நன்றாக கலந்து பின் சூடாக எடுத்து பரிமாறினால் சுவையான பால் சுறா புட்டு தயார்.