கல்யாண வீட்டு ஸ்டைல் ருசியான காரக்குழம்பு, அட்டகாசமான சுவையில் இப்படி ஒரு தரம் செஞ்சு பாருங்கள்!

Summary: கல்யாண வீடுகளில் வைக்கிற இந்த காரக்குழம்புகள்ல வத்தல் காய்கறி அப்படின்னு வெரைட்டியா எல்லாத்தையும்கலந்து போட்டு வைக்கும் போது ரொம்ப பெரிய ருசியா இருக்கும். கார குழம்பு அப்படிங்கிறதுரொம்பவே சுலபமா வீட்ல செய்யக்கூடிய ஒரு குழம்பு தான் இருந்தாலும் அதற்கான சில மசாலாக்கள்மட்டும் எப்படி அரைக்கிறோம் அப்படிங்கிறதுல தான் கல்யாண வீடுகளில் வைக்கிற மாதிரியானசுவை கிடைக்கும். கல்யாண வீட்டு கார குழம்பு மாதிரி எப்படி கார குழம்பு வைக்க போறோம்அப்படிங்கறது பார்க்க இருக்கோம். வாங்க கல்யாண வீடுகள்ல வைக்கிற மாதிரியான சுவையானகாரக்குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1 கப் மொச்சைபயிறு
  • 4 கத்திரிக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் வடகம்
  • 10 கொத்தவரங்காய் வற்றல்
  • 2 ஸ்பூன் சுண்டைக்காய் வற்றல்
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • புளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் தேங்காய்
  • 4 காய்ந்த மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மொச்சைபயிரை ஊற வைத்து ஒரு குக்கரில் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, தனியா சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு அதில் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் , தேங்காய் ,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வதக்கி வைத்துள்ள பொருட்களை ஆற வைத்து அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாகஅரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கத்தரிக்காய்களை காம்பை நீக்காமல்நான்காக கீறி வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், வடகம் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின் கொத்தவரங்காய் வற்றல் , சுண்டைக்காய் வற்றல் சேர்த்துபொரிக்கவும்.
  5. வற்றல் பொரிந்த பின் அதில் சின்ன வெங்காயம், தக்காளி,  சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும். அதில் மிளகாய்தூள், கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து கலந்துவிட்டு குழம்பை கொதிக்க விடவும்.
  6. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.குழம்பிற்கு தேவையான அளவுதண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு அதில் வதுக்கி வைத்துள்ளகத்தரிக்காய், வேக வைத்து எடுத்துள்ள மொச்சை பயிறு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. நன்றாக கொதிவந்த பிறகு சூடாக சாதத்துடன் பரிமாறினால் சுவையான கல்யாண வீட்டு சுவையில் காரக்குழம்புதயார்