Summary: மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். வழக்கமாக சிம்பிளாக செய்யும் மோர் குழம்பு போர் அடித்து விட்டதா? வித்தியாசமான சுவையில் மோர் குழம்பு சாப்பிட ஆசையா? அப்போ இந்த முறையில் டர்னிப் சேர்த்து மோர் குழப்பு செய்து பாருங்க. கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி போல டர்னிப்பும் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் ஒரு கிழங்கு வகை காய். டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் அதிக சத்துக் களைக் கொண்டுள்ளது. காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். டர்னிப் சேர்த்து மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும்.