ருசியான பூண்டு ஊறுகாய் ஒன்று மட்டும் வீட்டில் இருந்தால் போதும்! சைடிஷ் இல்லாத நேரத்திலும் இதனை சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம் !

Summary: பூண்டு ஊறுகாய் ஒன்று இருந்தால் போதும் சைடிஷ்இல்லாத நேரத்திலும் இதனை வைத்து சாப்பிட்டு முடிக்க முடியும். அவ்வாறு ஊறுகாய் பிரியர்கள்பல கோடி பேர் இருக்கின்றனர். கல்யாண பந்தியிலும், ஓட்டல்களிலும் சாப்பாடு பரிமாறும்பொழுது அத்ல் இந்த ஊறுகாயும் ஒரு டிஷ்ஷாக இருக்கும். இதனை எந்த வித உணவுடன் வேண்டுமானாலும்தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையான சுவையில் இருக்கும்.. வாருங்கள் இந்த பூண்டு ஊறுகாயை எப்படி சுலபமாகவீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 150 கிராம் பூண்டு
  • 6 பச்சை மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 1/2 மேசைக்கரண்டி பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 3 வரமிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 4 தேக்கரண்டி எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கி வைக்கவும். இரண்டாக பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
  3. அத்துடன் வறுத்து பொடித்த தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்க்கவும், அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு சுருள வதக்கவும்.
  4. பிறகு பூண்டு விழுதைச் சேர்க்கவும். அத்துடன் புளிக்கரைசல் மற்றும் வினிகரை ஊற்றி பூண்டு வேகும் வரை சுருள வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  5. காரசாரமான பூண்டு ஊறுகாய் தயார்