அருமையான செட்டிநாடு ஸ்டைலில் முள்ளங்கி குழம்பு ஒருமுறை இப்படி செய்து சுவைத்துடுங்கள்!!!

Summary: செட்டிநாடு முள்ளங்கி குழம்பு சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். முள்ளங்கியில்இருந்து ஒரு வாசம் வீசும் அல்லவா, அந்த வாசம் இந்த குழம்பில் நிச்சயம் வராது.  செட்டிநாடு உணவு என்றாலே அதில் சேர்க்கப்படும் வித்யாசமானமசாலாகலீல் கலவை தான்.. இந்த பக்குவத்தில் இந்த முறையில் சேர்த்து செய்தால் , ருசியும் மனமும் அற்புதமாக இருக்கும். அதற்கு எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவுகளில் வறுத்து அரைக்க வேண்டும் என்று பார்த்துவிடலாம்.

Ingredients:

  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 பல் தோலுரித்த பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 ஸ்பூன் சோம்பு
  • 2 தக்காளி பழங்கள்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 100 முள்ளங்கி
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1/4 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தோலுரித்த சின்ன வெங்காயம் –10 பல், தோலுரித்த பூண்டு – 2 பல், சிறிய துண்டு இஞ்சி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்துமுதலில் வதக்கி விட வேண்டும். 3 நிமிடங்கள் இந்த பொருட்களை எல்லாம் வதங்கிய பின்பு,சோம்பு – 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி பழங்கள் – 2, உப்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து,தக்காளி பழங்கள் குழையும் வரை நன்றாக வதக்கி விடுங்கள்.
  2. இறுதியாக குழம்பு மிளகாய்த்தூள் – 2 இரண்டுடேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், சேர்த்து1 நிமிடம் வதக்கி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்கள் நன்றாக ஆறிய பின்பு,மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இது அப்படியே இருக்கட்டும்.
  3. 150 கிராம் அளவு உள்ள முள்ளங்கியை தோல் சீவிவட்டவடிவில் வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் காய்ந்ததும், பட்டை – 1, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, சோம்பு – 1/4 கால்ஸ்பூன், தாளித்து கொள்ளவேண்டும்.
  4. அடுத்த படியாக தோலுரித்த சின்ன வெங்காயம்– 10 பல் சேர்த்து, 1 கொத்து கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக வெட்டி வைத்திருக்கும் முள்ளங்கியை கடாயில் போட்டுபச்சை வாடை நீங்கும் வரை வதக்கி விட்டு, அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடாயில் ஊற்றி குழம்பு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு,நன்றாக கலந்து ஒரு மூடியைப் போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. முள்ளங்கி மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் நன்றாக வெந்துவிடும். அவ்வளவு தாங்க கமகம வாசத்துடன் முள்ளங்கி குழம்பு ரெடி. இந்த குழம்பு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது. ரொம்பவும் தண்ணி ஆகவும் இருக்கக் கூடாது. மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி சுட சுட இந்த குழம்பை பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.