வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்கினை வெட்டி மகிழ்கின்றனர். இந்த கேக் ரெசிபிள் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும். இந்த கேக்கினை வீட்டில் செய்து சாப்பிட இப்போதேல்லாம் பலர் விரும்புகின்றனர். அந்த வகையில் தங்கள் வீட்டிலேயே கேழ்வரகு கேக் செய்ய இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். சிறுதானிய கேக்குகளில் ஒன்றான கேழ்வரகு கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Ingredients:

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 கப் பால்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 3 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

Steps:

  1. முதலில் கேழ்வரகு மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அத்துடன் வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் தயாராக வைத்துள்ள கேழ்வரகு, மைதா மாவு கலவையை பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
  4. கடைசியாக வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து கேழ்வரகு கேக் மாவு கலவையை ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  6. கேக் நன்கு ஆறியவுடன் விருப்பப்படி துண்டுகள் போட்டு பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் மிகவும் சத்தான, மிருதுவான, சுவையான கேழ்வரகு கேக் தயார்.