ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

Summary: உருளைக்கிழங்கை வைத்து குருமா, வறுவல் என்று தானே செய்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக தாபா ஸ்டைலில்ஒரு ஆலு மேத்தி சப்ஜி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது வரைநீங்கள் சுவைக்காத ருசியில், வித்தியாசமான முறையில், சொல்லப்பட்டுள்ள குறிப்பு இது.மிஸ் பண்ணாம ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்தி புலாவ், பரோட்டாவிற்குசூப்பரான சைட் டிஷ் இது.தேவையான பொருள்கள்

Ingredients:

  • 4 உருளைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • 1 கட்டு மேத்தி கீரை
  • 4 பல் பூண்டு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 ப்ரிஞ்சி இலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கீரையை ஆய்ந்து 3 முறை தண்ணீரில் அலசி வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை தோலுரித்து சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  3. பூண்டை தோலுரித்து சிறியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் மற்றும் ப்ரிஞ்சி இலை தாளித்து, பூண்டு போட்டு வதக்கவும்.
  4. பிறகு உருளைக்கிழங்கு மற்றும் கீரையைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். வதக்கியவற்றை குக்கரில் மாற்றி தூள் வகைகள், தக்காளி விழுது மற்றும் உப்புப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 2 விசில் வரவிடவும்.
  5. ப்ரஷர் அடங்கியதும் உருளைக்கிழங்கை லேசாக மசித்துவிடவும்.  கிரேவிபதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையானஆலு மேத்தி சப்ஜி தயார்.