மழைக்கு சூடாக எதாவது சாப்பிட தோன்றினால் கோதுமை வெஜ் மோமோஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த கோதுமை மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன் முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், கோதுமை வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள். மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதை மதிய உணவு உண்பதற்கு முன் starters ஆகவும் பரிமாறுகிறார்கள். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட்களில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். கோதுமை வெஜ் மோமோஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. வெஜ் மோமோஸில் உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 கப் துருவிய கேரட்
  • 1 கப் துருவிய முட்டைக்கோஸ்
  • 1/2 கப் நறுக்கிய பீன்ஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி பூண்டு
  • 1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின் பெரிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
  4. இப்போது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய வட்ட வடிவில் தேய்த்து வைக்கவும்.
  5. அதன்பிறகு அதில் ஒரு டீஸ்பூன் காய்கறிகள் கலவை எடுத்து தேய்த்த மாவின் நடுவில் வைத்து, மாவின் நுனியில் அழுத்தி பிடித்து மோமோஸ் போல் மடித்துக் கொள்ளவும்.
  6. இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7-10 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
  7. அவ்வளவுதான் சூடான சுவையான கோதுமை வெஜ் மோமோஸ் தயார்.