வீடே மணமணக்க கொத்தவரங்காய் சாம்பார்  ஒருமுறை இப்படி செய்வது பாருங்களேன்!

Summary: மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சாம்பார்  செய்திருக்கிறீர்களா?இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

Ingredients:

  • 1/4 கி கொத்தவரங்காய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 ஸ்பூன் விளக்கெண்ணெய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 1/4 சாம்பார் தூள்
  • உப்பு
  • புளி
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 வரமிளகாய்
  • 1/2 ஸ்பூன் பெருங்காய்த்தூள்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் கொத்தவரங்காயை கழுவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து அதில் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்தவரங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு குக்கரை திறந்து அதில் வேக வைத்த கொத்தவரங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். மீண்டும் புளித்தண்ணீர் வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  5. அதன் பிறகு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  6. இறுதியாக பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை சேர்த்து கலந்து விடவும்.
  7. அவ்வளவுதான் மிகவும் எளிதான, சுவையான கொத்தவரங்காய் சாம்பார் தயார்.