Summary: நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். புல்லுச்சாமை அல்லது சாமை என்று அழைக்கப்படும் இந்த குதிரைவாலி அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது.