கமகமனு  பட்டர் இறால் முட்டை மசாலா இதே முறையில் அப்படி செய்து பாருங்களேன்! சாப்பிட சாப்பிட நாவில் எச்சி ஊறும்!

Summary: பட்டர் இறால் முட்டை மசாலா மிகவும் சுவையானமற்றும் நமது நாவின் ருசிக்கு அடிமையாக்கும் உணவாகும். எதிர்ப்பு சக்தியை கூட்டும்இறால்..!பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது.அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இந்த செய்முறை விருந்து உணவுக்கு ஏற்றது, ஏனெனில்பட்டர் இறால் முட்டை மசாலா பார்க்கவே சாப்பிட தூண்டும் வகையில் இருக்கும். இது பொதுவாகசீன விருந்துகளிலும் பரிமாறப்படுகிறது. பட்டர் இறால் முட்டை மசாலா உணவைச் செய்வது மிகவும் எளிதானது.தேவையான பொருட்கள்:

Ingredients:

  • 1/4 கப் பட்டர்
  • 1/4 கிலோ இறால்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம்மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை வேக வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச்சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும்,தக்காளியைச் சேர்த்துநன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  4. மசாலா திக்கானதும் அதனுடன் பட்டர் மற்றும்வேகவைத்த முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும். சுவையான பட்டர்இறால் முட்டை மசாலா தயார்.