வல்லாரை கீரையை வைத்து கமகமனூ ருசியான IQ தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Summary: வல்லாரைக் கீரையை வைத்து ஒரு தோசை சூப்பரா செய்து குழந்தைகளுக்கு கொடுக்க போறோம். அந்த தோசை எல்லாருமே சாப்பிடலாம் ஞாபக சக்தி பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருமே இந்த IQ தோசையை சூப்பரா செய்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம இந்த வல்லாரைக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு இந்த மாதிரி வச்சு கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு ரொம்பவே அடம்பிடிப்பாங்க. இந்த வல்லாரை கீரையை வச்சு அருமையான தோசை குழந்தைகளுக்கு IQ அளவை அதிகம் பண்றதுக்காக செய்து கொடுக்கப் போறோம்.

Ingredients:

  • 1 கப் தோசை மாவு
  • 1 கைப்பிடி வல்லாரை கீரை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வல்லாரைக் கீரையை பொரியலுக்கு, குழம்பிற்கு செய்யும்பொழுது வெறும் இலைகளை மட்டும் பயன்படுத்துவோம். ஆனால் தோசையின் பொழுது அடியில் உள்ள தண்டை சிறிதளவு மட்டும் நறுக்கிவிட்டு அப்படியே அலசி கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. பிறகு கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் , பூண்டு,  இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அதே மிக்ஸி ஜாரில் வல்லாரைக் கீரை , கொத்தமல்லி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு எடுத்து வைத்துள்ள தோசை மாவில் அரைத்து வைத்துள்ள வல்லாரைக் கீரை விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும் .தேவை என்றால் உப்பு சேர்த்து கலக்கவும்.
  4. பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து கலந்து வைத்துள்ள வல்லாரை தோசை மாவு எடுத்து தோசைகளாக வார்த்தெடுத்தால் ருசியான  IQ தோசைதயார்.
  5. இந்த தோசை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த தோசையை காரச் சட்னி தேங்காய் சட்னி சேர்த்து  பரிமாறலாம்.