வீடே மணக்க மணக்க முருங்கைக்காய் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: முருங்கைக்காய் வாங்கினால் சாம்பார் குழம்பு,வெங்காயம் தக்காளி போட்டு பொரியல் தானா. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது சமைக்க முடியாதாஎன்று கேட்பவர்களுக்கு சூப்பரான முருங்கைக்காய் கறி ரெசிபி. மணக்க மணக்க இந்த மசாலாபொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் கறி மட்டுமல்ல கத்திரிக்காய் வதக்கல்,கேரட் பீன்ஸ் பொரியல், புடலங்காய் பொரியல், என்று மற்ற காய்கறிகளுக்கும் இந்த முறையில்சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்வாங்க.

Ingredients:

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் 2 முருங்கை காய்களை எடுத்து துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் போட்டு, அந்த முருங்கை காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு மூடி போட்டு முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. முக்கால் பாகம் வெந்த இந்த முருங்கைக்காய் தண்ணீரோடு அப்படியே இருக்கட்டும். அடுத்த படியாக முருங்கைக்காய் மசாலா கறி செய்வதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பின் மீது வையுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
  3. எண்ணெய் நன்றாக காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன்,கருவேப்பிலை – 1 கொத்து, மிக மிக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், மிக மிகபொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5, சேர்த்து முதலில் நன்றாக வதக்க வேண்டும். (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய சைஸ் பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கொள்ளுங்கள்.)
  4. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், மீடியம் சைஸ்பழுத்த தக்காளி 2 – மிக மிக பொடியாக நறுக்கியது சேர்த்து, தக்காளியின் பச்சை வாடை போகும்வரை வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்த படியாக வெங்காயம் தக்காளியுடன் மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1 1/2 ஸ்பூன், சீரகத்தூள்– 1/4 ஸ்பூன், மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்து இந்த மசாலாவை நன்றாக கலந்துவிட்டு,முருங்கைக் காயை வேக வைத்திருக்கும் தண்ணீரில் இருந்து 2 குழிக்கரண்டி அளவு தண்ணீரைஎடுத்து, கடாயில் இருக்கும் மசாலாவில் ஊற்றி, மசாலா பொருட்களை 2 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.
  5. கடாயில் இருக்கும் வெங்காயம் தக்காளி, மசாலாபொடியின் பச்சை வாடை நீங்கியதும், முக்கால் பாகம் வேக வைத்திருக்கும் முருங்கைக்காயைதண்ணீருடன் எடுத்து இந்த கடாயில் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு மசாலாஅனைத்தும் முருங்கைக்காயில் ஊறும்படி வேகவிட வேண்டும்.
  6. மசாலாவுடன் முருங்கைக்காய் சேர்ந்து வெந்து அதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி, தொக்கு பதத்திற்கு, எண்ணெய் பிரிந்து வரும்போதே கமகமவென வாசம் வீசும்.
  7. இறுதியாக கொத்த மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள். அட்டகாசமான முருங்கைக்காய் மசாலா கறி தயார். இந்த ரெசிபியை செஞ்சு வச்சா  யாருமே வேணான்னு சொல்ல மாட்டார்கள். விருப்பமா சாப்பிடுவாங்க.ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.