காரசாரமான சுவையில் கிராமத்து மிளகாய் தொக்கு செய்வது எப்படி ?

Summary: இன்று இந்த காரசாரமான மிளகாய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த தொகை நீங்கள் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவன் சுவை எல்லையற்றதாக இருக்கும் மேலும் நீங்கள் இதை இட்லி தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுடனும் வைத்து சாப்பிடலாம் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த மிளகாய் தொக்கு இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தார் போல் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

Ingredients:

  • 200 கிராம் பச்சை மிளகாய்
  • 4 மேசை கரண்டி எண்ணெய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 5 தக்காளி
  • உப்பு
  • புளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tbsp வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு முறை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
  2. பின் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் நான்கு மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் நாம் வைத்திருக்கும் மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் மிளகாய் பாதி அளவு வெந்து வந்ததும் இதனுடன் 10 பல் பூண்டு 25 தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  4. அதன் பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் பொடியாக நறுக்கிய ஐந்து தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும். பின் நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சிறிது கருவேப்பிலை தூவி வதக்கி கொள்ளுங்கள்.
  5. பின்பு அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கி வந்தவுடன் வதக்கிய பொருள்களை குளிர வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு துருவி வெல்லம் சேர்த்து கொரகொரவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. அவ்வளவு தான் காரசாரமான சுவையில் மிளகாய் தொக்கு இனிதே தயாராகிவிட்டது. உங்களுக்கு காரம் கம்மியாக வேண்டும் என்றால் இன்னும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.