Summary: வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது… சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும். பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது.