அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!

Summary: நெல்லை உருளைப்பொரியல் குறிப்பாக ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு இதை சொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.தேவைப்பட்டால் சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். எல்லா வெரைட்டி ரைஸ்க்கும்சைடிஷ் ஆக வைக்கலாம். ஒரு ஸ்பெஷல் மசாலா சேர்த்து போட்டு, இந்த உருளைக்கிழங்கு பொரியல்இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். சுவைத்து விட்டால் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.

Ingredients:

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • உளுந்து
  • 2 தேங்காய்த் துருவல்
  • 1 சீரகம்
  • 5 சின்ன வெங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள்.
  2. அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள்.
  3. எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
  4. வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள்.
  5. கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.
  6. சுவையான நெல்லை உருளைப் பொரியல் தயார்