சுவையான சாமை ஜவ்வரிசி தோசை காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்கள்

Summary: சாமையில் நிறைய வகை விதவிதமானஉணவுகள் செய்து சாப்பிடலாம். அது ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். இப்போ நிறைய நபர்கள்சிறே தானிய உணவுகளுக்கு தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இந்த சிறுதானிய உணவுகள்அதிக அளவில் நார்ச்சத்து இருக்கறதுனால இது உடலுக்கு ரொம்பவே நல்லது. அதிகளவு நல்ல ஊட்டச்சத்துக்கள்கொண்ட இந்த சிறுதானியங்களௌ உணவுகள்ல சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்குது. அப்படி சாமையும் ஜவ்வரிசி வச்சு எப்படி ரொம்ப ருசியான தோசைசெய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க

Ingredients:

  • 1 கப் சாமை
  • 12 கப் ஜவ்வரிசி
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சைமிளகாய்
  • 12 கப் தயிர்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் சாமையும் ஜவ்வரிசியையும் ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக வசிய பொடியாக அடித்துக் கொள்ளவும். பிறகு பொடியாக அரைத்து வைத்துள்ளசாமை மற்றும் ஜவ்வரிசி ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  2. அந்த சாமை ஜவ்வரிசி மாவில் பொடியாக நறுக்கியஇஞ்சி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின்  சாமை ஜவ்வரிசியில் சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்துநன்றாக கலந்து விடவும்.
  3. பிறகு அதில் தேவையான அளவு உப்பு கொத்தமல்லி தலை சேர்த்து நன்றாக கலந்து விடவும். உருளைக்கிழங்கைநன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. வேகவைத்து எடுத்துள்ள உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சாமை ஜவ்வரிசியுடன் சேர்ந்து நன்றாக கலந்து விடவும்.  உருளைக்கிழங்கு மாவில் கலந்து பிறகு அதில் தயிர்சேர்த்து நன்றாக கலந்து மூடி விடவும்.
  5. ஒரு15 நிமிடம் கழிந்த பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து மெலிதான தோசைகளாக தட்டவும். மூடிபோட்டு ஒரு புறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு எடுத்தால் மிகவும் ருசியானசாமை ஜவ்வரிசி தோசை தயார்.