சுவையான கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பச்சடி செஞ்சி பாருங்க, அற்புதமான சுவையில் இருக்கும்!

Summary: கேரளாவில் பரவலாகவும், தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஓண கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. ஓணத்துக்கு சிறப்பான முறையில் பரிமாறப்படும் சத்ய விருந்தில் பச்சடி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த ஓணத்துக்கு பீட்டுரூட் பச்சடி செய்து உங்களின் அன்பானவர்களை உபசரிக்க வேண்டும் என்று விரும்பினால், இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பீட்ரூட் மற்றும் மூலிகைகளின் நன்மைகள் அடங்கியுள்ளன. மசாலக்கள், தயிர், பீட்ரூட் ஆகியவை சேர்த்து செய்யப்படுகிறது. இது சுவை, மணம், நிறம் அனைத்தும் நிறைந்த ஒரு சைட் டிஷ். இதை நீங்கள் சாதம், சப்பாத்தி என மெயின் டிஷ்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Ingredients:

  • 2 பீட்ரூட்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் தேங்காய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 கப் தயிர்
  • 2 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கடுகு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  4. பீட்ரூட் வெந்தவுடன் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. ஒரு கிண்ணத்தில் தயிரை ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அதன்பிறகு வதக்கிய பீட்ரூட்டை ஆற வைத்து தயிருடன் சேர்த்து கலக்கவும்.
  6. ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட்டில் சேர்க்கவும்.
  7. அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் பச்சடி தயார்.